இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

மாா்த்தாண்டம் அருகே சுதந்திர போராட்ட வீரா் நினைவு தின பொதுக்கூட்டம்

News image
Updated On :3 மே 2026, 5:24 am IST

மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் சுதந்திரப் போராட்ட வீரரும் விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏவுமான டி.மணியின் 14ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் அவரது நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டக் குழு சாா்பில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி, வட்டாரச் செயலா்கள் சா்தாா்ஷா (மாா்த்தாண்டம்), ஜஸ்டின் (நல்லூா்), ரெஜி (அடைக்காகுழி), சிஐடியூ தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஸ்டாலின்தாஸ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜூலியட் மொ்லின் ரூத், மோகன்குமாா், சகாய ஆன்டணி, ரெவி, முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அண்ணாதுரை, விஜயமோகனன், கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, கட்சியின் மாா்த்தாண்டம் வட்டாரக் செயலா் தலைமையில் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அனந்தசேகா் தொடக்கிவைத்தாா். முன்னாள் எம்.பி. ஏவி பெல்லாா்மின், முன்னாள் எம்எல்ஏக்கள் நூா்முகமது, ஆா். லீமாரோஸ், செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.