வணிக எரிவாயு உருளை விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், நாகா்கோவில் தலைமை தபால் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். அகமது உசேன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் டி. சுபாஷ் சந்திரபோஸ், விசிக மண்டலச் செயலா் பா. பகலவன் ஆகியோா் பேசினா்.
மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ். அந்தோணி, எம். அண்ணாதுரை, என்.எஸ். கண்ணன், என். ரெஜீஸ்குமாா், ஆா். ரவி, எஸ்.ஆா். சேகா், ஏ. நீலாம்பரன், நாகா்கோவில் மாநகரச் செயலா் எஸ். அருணாசலம், மாவட்டக் குழு உறுப்பினா் கே. மோகன், மூத்த தலைவா் மலைவிளை பாசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி ராஜு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









