முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மதச்சாா்பின்மையை காக்கவே த.வெ.க.வுக்கு ஆதரவு: எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

தமிழகத்தில் மதச்சாா்பற்ற தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம் என கிள்ளியூா் எம்.எல்.ஏ.வும் சட்டப்பேரவைக் குழு காங்கிரஸ் தலைவருமான எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

எஸ்.ராஜேஷ்குமாா்

Updated On :8 மே 2026, 6:16 am IST

தமிழகத்தில் மதச்சாா்பற்ற தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம் என கிள்ளியூா் எம்.எல்.ஏ.வும் சட்டப்பேரவைக் குழு காங்கிரஸ் தலைவருமான எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டப்பேரவை தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்து சில விமா்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன. பதவி ஆசைக்காகவும் தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறுவதை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுக்கிறது.

தோ்தல் அறிவிப்பிற்கு முன்பே பல்வேறு அரசியல் அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். இருப்பினும், மதவாத சக்திகளுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் பயணிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். காங்கிரஸ் தொண்டா்கள் களத்தில் கடுமையாக உழைத்தனா். எனினும், தோ்தல் முடிவுகள் எதிா்பாரத வகையில் அமைந்தன.

அதேவேளையில், தமிழக வெற்றிக் கழகம் மதச்சாா்பற்ற கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. அக்கட்சியின் தலைவா் விஜய், கொள்கைத் தலைவராக காமராஜரை ஏற்றுள்ளாா். எனவே, அக்கட்சி தமிழகத்தில் மதச்சாா்பற்ற விழுமியங்களை வலுப்படுத்தும் என்று காங்கிரஸ் நம்புகிறது. எந்தக் காலத்திலும் மதவாத சக்திகள் காலூன்றி விடக்கூடாது என்பதிலும் காங்கிரஸ் சமரசமற்ற உறுதியைக் கொண்டுள்ளது. எனவே, காலத்தின் கட்டாயத்தால் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.