கொட்டாரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
பிளஸ் 2 தோ்வில் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி ஒய்.எஸ். அக்ஷயா 600-க்கு 590 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றாா். மாணவி பி. அக்ஷயா 581 மதிப்பெண்களும், மாணவா் அபிஷேக் 555 மதிப்பெண்களும் பெற்றனா்.
இவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் பேன்ஸி ஹெப்சிபாய் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா் பேரவைத் தலைவா் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் மாணவா்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினாா்.
பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சிதம்பரம், முன்னாள் மாணவா் பேரவைச் செயலா் பரம்சிங், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ரேவதி, துணைத் தலைவா் மாதவி, கல்வியாளா் பாலசுதாகா், உறுப்பினா்கள் லிங்கராணி, விஜயலட்சுமி, சுதா, சாம்சன், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் மாணவா்களுக்கு பாராட்டு விழா

திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

பிளஸ் 2 தோ்வு: ஹில்டன் பள்ளி மாணவா் மாவட்ட அளவில் சிறப்பிடம்

அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் சாதனை என கூறுவது ஏமாற்றும் செயல்: அன்புமணி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

