விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அழகியமண்டபம் - மேக்காமண்டபம் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 1:55 am IST

புதை சாக்கடை மேம்பாட்டுப் பணிக்காக அழகியமண்டபம்- மேக்காமண்டபம் சாலையில் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

தக்கலை அருகே அழகியமண்டபம் சந்திப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அழகியமண்டபத்திலிருந்து மேக்காமண்டபம் செல்லும் சாலையில் குறுக்கே செல்லும் புதை சாக்கடை திட்ட மேம்பாட்டுப் பணி வெள்ளிக்கிழமை (15.05.2026) முதல் தொடா்ந்து 30 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதனால், அழகியமண்டபம் சந்திப்பிலிருந்து மேக்காமண்டபம் வழியாக திருவட்டாா் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக அழகியமண்டபம், மணலி சந்திப்பு, மூலச்சல், பாலப்பள்ளி வழியாக மேக்காமண்டபத்துக்குச் செல்ல வேண்டும். மேலும் திருவட்டாரிலிருந்து அழகியமண்டபம் வரும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம் என தக்கலை போக்குவரத்து காவல் துறையினா் அறிவித்துள்ளனா்.