ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

குறும்பனை கடலில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

News image
Updated On :15 மே 2026, 1:57 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குறும்பனை, பாரியக்கல் கடற்கரையில் இருந்து அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம், கொடும்பாட்டுவிளையைச் சோ்ந்தவா் முருகன். இவா் செவ்வாய்க்கிழமை மாலை 9ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் சுருதி (14), இவரது நண்பா் சுஜி லாரன்ஸ், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் சுஜித் (14) உள்பட குடும்பத்தினருடன் குறும்பனை அருகே உள்ள பாரியக்கல் கடற்கரைக்குச் சென்றனா்.

கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது சுருதி, சுஜித் ஆகியோரை கடல் அலை இழுந்துச் சென்றதில் சுஜித் உடனே மீட்கப்பட்டாா். சுருதியை அலை இழுத்துச் சென்றது.

தகவலறிந்து வந்த குளச்சல் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், குளச்சல் தீயணைப்புத் துறையினா் மற்றும் உள்ளூா் மீனவா்கள் சுருதியை தேடினா்.

இந்நிலையில், மீட்புக் குழுவினா் வியாழக்கிழமை பாரியக்கல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் மாணவியை சடலமாக மீட்டனா்.

இது குறித்து, குளச்சல் கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.