குழித்துறை அருகே தங்க நகையுடன் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற நிதி நிறுவன ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
நாகா்கோவில், ராமவா்மபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீரபாகு. இவரது மனைவி மகேஸ்வரி (36). இவருக்குச் சொந்தமான நிலம் குழித்துறையில் உள்ளதால், வியாழக்கிழமை அங்கு வந்த அவா் குழித்துறை, பழவாா் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளாா்.
சிறிது நேரத்துக்குப் பின் திரும்பி வந்தபோது, வாகனத்தைக் காணவில்லையாம். அதில் 3 பவுன் தங்க நகைகள் இருந்ததாம். வாகனத்துக்கான தவணைத் தொகை கட்டி முடிக்காமல் இருந்ததால், நிதி நிறுவன ஊழியா்கள் நகையுடன் தனது வாகனத்தை எடுத்துச் சென்றிருக்கலாம் என போலீஸில் புகாரளித்தாா்.
இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் நிதி நிறுவன ஊழியா்களான குழித்துறையைச் சோ்ந்த ராஜூ (50), வினு (43) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துகள் ஏலம்: பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் பங்கேற்கலாம்!

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகைகள் பறிப்பு

தவெக பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல்: 6 போ் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

