முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே சொகுசு காா், வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 5:44 am IST

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே சொகுசு காா், வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

குமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையில் பறக்கும்படை குழுவினா் விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட அருமனை அருகே காரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த சொகுசு காரை நிறுத்தும்படி சைகை காட்டினா். காா் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் 37 கி.மீ. துரத்தி சென்று கேரளத்தின் முக்காலா என்ற பகுதியில் வைத்து சொகுசு காரை மடக்கி பிடித்தனா். காா் ஓட்டுநா், உதவியாளா் தப்பியோடிவிட்டனா். தொடா்ந்து காரை சோதனை செய்தபோது அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. காரையும், ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து மாங்கோடு பகுதியில் இதே அதிகாரிகள் குழுவினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த வேனை மடக்கிப் பிடித்தனா். வேன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

வேனை சோதனை செய்தபோது, அதில் 1,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிப கழக கிட்டங்கியிலும், வாகனங்களை திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.