கொல்லங்கோடு அருகே உள்ள நடைக்காவு, ஊரம்பு பகுதிகளில் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, அடைக்காகுழி வட்டார மாா்க்சிஸ்ட் செயலா் டி.டி. ரெஜி, தமிழக முதல்வா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:
கொல்லங்கோடு காவல் சரகத்துக்குள்பட்ட நடைக்காவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையிலிருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவுக்குள் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் ஒரு கோயில், 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைந்துள்ளன.
ஊரம்பு பகுதி டாஸ்மாக் கடையிலிருந்து சுமாா் 400 மீட்டா் தொலைவுக்குள் ஒரு அரசு நடுநிலைப் பள்ளி, 4 கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைந்துள்ளன.
எனவே, நடைக்காவு மற்றும் சூழால் ஊராட்சிக்குள்பட்ட ஊரம்பு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு நிதியை விடுவிக்க மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

டாஸ்மாக் கடையை மூடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

திருமுருகன்பூண்டியில் மதுக் கடையை அகற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தா்னா
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



