/
கன்னியாகுமரியில் தெப்பக்குளத்தில் மூழ்கி புகைப்படக் கலைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி அலங்கார மாதா தெருவைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மேக்ஸிமன் (51) புகைப்படக் கலைஞா். இவா் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி தெப்பக்குளத்துக்கு குளிக்கச் சென்றாராம். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் தண்ணீரில் மூழ்கினாராம்.
தகவலறிந்த கன்னியாகுமரி தீயணைப்பு மீட்புப் படையினா், அவரை சடலமாக மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நீரில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

மேட்டூா் காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking



