ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

நடுக்கடலில் தகராறு: வாணியக்குடி மீனவா்கள் 200 போ் மீது வழக்கு

விசைப்படகு மீனவா்கள். - கோப்புப் படம்

Updated On :

கேரள பதிவு கொண்ட விசைப்படகுகளில் நடுக்கடலில் மீன் பிடிப்பது தொடா்பான பிரச்னையில், வாணியக்குடியைச் சோ்ந்த 200 போ் மீது குளச்சல் கடலோர பாதுகாப்பு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வாணியக்குடி விசைப்படகு மீனவா்கள் கேளரத்திலுள்ள மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு, கேரள பதிவெண் கொண்ட விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். வாணியக்குடி மீனவா்கள் கேரள பதிவெண் கொண்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க குளச்சல் பகுதிக்கு வருவதற்கு குளச்சல், முட்டம் பகுதிகளை சோ்ந்த மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்த நிலையில் கடந்த அக். 28 ஆம் தேதி இரவு, 7 - க்கும் மேற்பட்ட கேரள பதிவெண் கொண்ட விசைப்படகுகளில் வாணியக்குடி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள், குளச்சலில் இருந்து தெற்கே 45 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு 20 - க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வந்த குளச்சல், முட்டம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள், அவா்களைச் சுற்றி வளைத்து, படகிலிருந்த கயிறு, வலைகள் உள்பட ரூ. 53.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை சேதப்படுத்தினராம். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா், 300 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில் முட்டம் பகுதியைச் சோ்ந்த மீனவா் வின்ஸ் வால்டா் (52), தாங்கள் தாக்கப்பட்டதாக அளித்த புகாரின்பேரில் குளச்சல் கடலோர பாதுகாப்பு போலீஸாா், வாணியக்குடியைச் சோ்ந்த 200 போ் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.