
சிஎம் 2031! கவனம் ஈர்க்கும் திருமாவளவன் கார் பதிவெண்!
விசிக தலைவர் திருமாவளவன் பயணித்த காரின் பதிவெண் பற்றி...

திருமாவளவன் பயணித்த காரின் பதிவெண் - x
‘டிஎன் சிஎம் 2031’ என்ற பதிவெண் கொண்ட காரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பயணம் செய்தார்.
சென்னை, பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் படப்பிடிப்புக்காக திருமாவளவன் வருகை தந்த "TN 07 CM 2031" பதிவெண் கொண்ட டெஸ்லா கார் தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்ட விசிக 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில், பின்னர், அக்கூட்டணியிலிருந்து விலகி தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்தது.
தவெக அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற்ற நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விசிக இணைந்தது.
மசவெகூயில் காங்கிரஸ், மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளும் இணைந்தது. இந்த கூட்டணி முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
CM 2031! Thirumavalavan's car registration number draws attention!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





