இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

பழனி மலைக் கோயிலில் செப்.22 முதல் மீண்டும் ரோப் கார் சேவை!

பழனி மலைக் கோயிலில் ரோப் கார் சேவை மீண்டும் இயக்கப்படவிருப்பது பற்றி....

Rope car service to resume at Palani Hill Temple from Sept. 22!

பழனி மலைக் கோயில் ரோப் காா்.

Published On :

பழனி மலைக் கோயிலில் ரோப் கார் சேவை செப்.22 முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த 64 நாட்களாக ரோப் கார் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், பணிகள் நிறைவடைந்து செப்.22 முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

பழனி மலைக் கோயிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் காா் சேவையைப் பயன்படுத்தி மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

இதில் இரண்டரை நிமிட நேரத்தில் மலைக் கோயிலை அடைய உதவும் ரோப் காா் பக்தா்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

ரோப் காா் சேவையில் பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாள்தோறும் ஒருமணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் 45 நாள்களும் பராமரிப்புப் பணிகள் நடைபெறும்.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்புப் பணிகள் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been announced that the rope car service at the Palani Hill Temple will resume operation from September 22.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.