
கார் ரேஸிங் டிக்கெட் விலை ரூ.4,000: அஜித்தின் அறிவுரையால் அவரது போட்டியையே புறக்கணித்த ரசிகர்!
நடிகர் அஜித்தின் பழைய அறிவுரையை மேற்கோள்காட்டி அவரது கார் ரேஸிங் போட்டியைப் புறக்கணித்த ரசிகர் குறித்து...

கார் ரேஸிங் பயிற்சியில் அஜித்குமார். - படம்: எக்ஸ் / அஜித்குமார் ரேஸிங்.
நடிகர் அஜித்தின் பழைய அறிவுரையை மேற்கோள்காட்டி அவரது கார் ரேஸிங் போட்டியைப் புறக்கணித்த ரசிகரின் எக்ஸ் தளத்தின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். சில போட்டிகளில் கலந்துகொண்டு சொல்லதக்க வெற்றிகளையும் ஈட்டியுள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் தனது குழுவினருடன் கலந்துகொண்டார். இதற்கிடையே, பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருதை அஜித் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
அஜித் குமார் ரேஸிங் பயிற்சிகள், போட்டிகள், அவரின் பேட்டிகள் ஆகியவற்றை தொகுத்து கிளாடியேட்டர்ஸ் என்கிற பெயரில் ஆவணப்படத்தைத் தயார் செய்துள்ளனர். இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
தற்போது, மிச்செலின் லு மான்ஸ் கோப்பை சில்வர்ஸ்டோன் பிரிவுக்கான போட்டிகள் செப்.11- 12ல் நடைபெறுகின்றன. இதில் அஜித் குழுவினர் கலந்துகொள்கிறார்கள். இதற்கான டிக்கெட் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமைக்கு 20 பவுண்ட், சனிக்கிழமைக்கு 27 பவுண்ட், ஞாயிற்றுக்கிழமைக்கு 30 பவுண்ட் எனவும் மூன்று நாளைக்கும் சேர்த்து 45 பவுண்ட் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிவுக்கு ரசிகர் ஒருவர், “மன்னிக்கவும் தல. டிக்கெட் விலை 30 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.3, 856). உங்களது முந்தைய அறிவுரையின்படி நான் இந்தப் பணத்தை எனது குடும்பத்துக்குச் செலவிடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவு அஜித் ரசிகர்களைடையே கவனம் பெற்றுள்ளது. சிலர் நேர்மறையாக இதனைப் பாராட்டியும் சிலர் எதிர்மறையாக இவரைத் திட்டியும் கமெண்ட் செய்து வருகிறார்கள். முன்னதாக, அஜித் விளம்பரத்தில் நடித்தபோது அவரது ரசிகர்களே அவரை விமர்சித்ததும் கவனிக்கத்தக்கது.
Summary
Car racing ticket priced at ₹4,000: Fan skips Ajith's race itself, following the star's advice!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






