பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

ஏ.ஆர். ரகுமான் மகன் சென்ற கார் விபத்து!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மகன் அமீன் சென்ற கார் விபத்தில் சிக்கியது பற்றி....

A.R. Rahman's son's car involved in an accident!

மகன் அமீனுடன் ஏ.ஆர். ரகுமான்.

Published On :

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மகன் அமீன் சென்ற கார் சிறிய விபத்தில் சிக்கியது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகன் அமீன். இவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தனது விலை உயர்ந்த காரில் நண்பரோடு கிண்டி நோக்கி சென்றிருக்கிறார்.

அப்போது, ஒலிம்பியா டெக் பார்க் சிக்னல் அருகே வாடகை கார்(கால் டாக்சி) மீது அமீனின் கார் மோதியதாக தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் அமீன், அவரது நண்பர் மற்றும் மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் விபத்தில் சிக்கிய இரண்டு கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு கதீஜா, ரஹீமா என இரண்டு மகள்களும் ஏ.ஆர். அமீன் என்ற மகனும் உள்ளார்.

Summary

Composer A.R. Rahman's son Ameen's car involved in a minor accident.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.