பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம்

மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்து குறித்து...

News image

மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி. மோதிய வேகத்தில் நொறுங்கிய கார் - டிஎன்எஸ்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 1:40 pm IST

மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் மீது மற்றொரு கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர்.

சென்னை பாடிகுப்பம் ஸ்ரீராம்(32) ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிக்கு காரில் குடும்பத்தினருடன் சென்றுகொண்டிருந்தார். திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, முன்னாள் சென்ற எஸ்.வி. மங்கலம் ரத்தினம் மகன் முருகன்(40), சின்னையா மகன் முருகன்(55) ஆகியோர் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் செல்வதற்காக ஓட்டுநர் காரை திறப்பியுள்ளார். இதில், கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை கடந்து எதிர்திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பிரகாஷ்(42) கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் அப்பளம் போன்று நொறுங்கியது. இதில், காரில் இருந்த ஸ்ரீராம்(32), அவரது மனைவி ரஞ்சனா(30), அவர்களது ஒன்றரை வயது குழந்தை கிருத்திகா, சகோதரர் பாலாஜி(28), தாய் ராஜகுமாரி(52) உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் காரில் பயணம் செய்த தந்தை கனகராஜ்(55) உள்ளிட்ட 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிவண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்து வந்த ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

விபத்து குறித்து மேலூர் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Regarding the accident in which a car collided with another car on the Thumbaipatti four-lane highway near Melur, Madurai...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.