சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஹைதராபாத்தில் 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி முதியவர் பலி!

ஹைதராபாத்தில் சிறுவன் ஓட்டிய கார் மோதி முதியவர் பலியானது பற்றி...

News image

ஹைதராபாத்தில் 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி முதியவர் பலி - x

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:54 pm IST

ஹைதராபாத்தில் 17 வயது சிறுவன் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில், 65 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள கர்மிக நகரில் 17 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காரை ஓட்டியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்த முயன்ற பிரபாகர் (35) என்பவர் படுகாயமடைந்தார். அவருடன் வாகனத்தில் சென்ற ராஜேந்திர குமார் (65) என்பவர் மீது காரின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபாகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை அளித்த தகவலின்படி, நவாஸ் என்பரிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட காரை அந்தச் சிறுவன் ஓட்டிச் சென்றதாகவும், பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், வேகம் அதிகரித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரைப் பதறவைக்கிறது.

அதிவேகமாக வந்த கார், சாலையோரம் நிறுத்த முயற்சிக் கொண்டிருந்த பைக் மீது மோதுகிறது. பைக்கை ஓட்டிய பிரபாகர் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்திருந்த ராஜேந்திர குமாரை இடித்து அவர் மீது ஏறிய கார், அங்கிருந்த எட்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது.

உடனடியாக அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, ​​ராஜேந்திர குமார் காரின் பின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கியிருந்தது தெரியவந்தது.

அவர்கள் காரை தூக்கி, ராஜேந்திர குமாரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

காரை ஓட்டிய சிறுவனை கையும்களவுமாகப் பிடித்த அப்பகுதி மக்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மதுராநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Elderly man killed after being hit by a car driven by a 17-year-old boy in Hyderabad!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.