தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

வாட்ஸ்ஆப், கார் எண்கள் கசிவு: சபர்மதி படத்திற்காக கொலை மிரட்டல்களை எதிர்கொண்ட விக்ராந்த் மாஸி!

நடிகர் விக்ராந்த் மாஸி பகிர்ந்த அதிர்ச்சியூட்டும் அனுபங்கள் குறித்து...

News image

விக்ராந்த் மாஸி - படம்: ஐஏஎன்எஸ்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 1:02 pm IST

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தில் நடித்ததற்காக தனது வாட்ஸ்ஆப், கார் எண்கள் லீக் ஆனதாக அதிர்ச்சியூட்டும் தகவல்களை நடிகர் விக்ராந்த் மாஸி பகிர்ந்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட்டில் ‘சபர்மதி ரிப்போர்ட்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் விக்ராந்த மாஸி நாயகனாக நடித்திருந்தார்.

தீரஜ் சர்மா இயக்கிய இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ரித்தி டோக்ரா நடித்துள்ளனர். இந்தப் படம் ஒருபக்க ஆதரவுடன் இருந்ததாக விமர்சிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி படத்தைப் பார்த்து ஆதரவு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

டுவெல்த் பெயில், செக்டார் 36 படங்கள் ஹிட் அடித்தும் நடிப்பில் இருந்து சிறிதுகாலம் ஓய்வு எடுப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் ஷேகர் சுமன் உடனான நேர்காணல் ஒன்றில் விக்ராந்த் மாஸி பேசியிருப்பதாவது:

தி சபர்மதி ரிபோர்ட் என்ற படத்தில் நடித்திருந்தேன். அதற்காக பெருமையாகவும் கருதுகிறேன். அந்தப் படத்தினை சிலர் பிரச்சாரம் என்றனர். நாங்கள் கோத்ரா ரயில் எரிப்பு குறித்து எடுத்திருந்தோம். சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எறிந்தது குறித்து எடுத்திருந்தோம். எனது வாட்ஸ்ஆப் எண், கார் எண் கசிந்தன. என்னை மக்கள் வெளிப்படையாகவே மிரட்டினார்கள். அதிகமான வசைகளை எதிர்கொண்டேன்.

அந்த சமயத்தில்தான் எனக்கு மகன் பிறந்திருந்தான். அவனுக்கு ஆறுமாதம்தான் ஆகியிருந்தது. அதனால் நான் மிகவும் தாக்கத்தை எதிர்கொண்டேன். இதனை வெளிப்படையாகவே ஊடகங்களிடம் தெரிவித்தேன்.

எப்படியானாலும் காலம் கடந்த பிறகு என்னை மிரட்டியவர்கள் எல்லாம் கோழைகள் என உணர்ந்துகொண்டேன். என்னைப் பற்றி அவதூறாகப் பேசியவர்களை நான் மதிக்கவில்லை. எனது மக்களுக்கு மட்டுமே நான் பொறுப்பானவன்.

டுவெல்த் பெயில், செக்டார் 36, சபர்மதி ரிபோர்ட் படங்களால் எனக்கு 2023, 2024 நன்றாகவே இருந்தது. இருந்தும் எனது குடும்பத்தை விட்டு தூரமாகவே இருந்தேன். எனக்கு புகழ் கிடைத்தது; ஆனால், இருந்தும் தனிமையாகவே உணர்ந்தேன். எனது மகன், குடும்பத்தை மிஸ் செய்தேன்.

எனது படத்தை பிரதமர் பாராட்டினார். நம்பமுடியாத காலமாக இருந்தது. அப்போதுதான் மகன் பிறந்ததால் என்னால் அவனை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை. அவன் என்னை, ’அப்பா’ எனும்போது என்னால் அங்கிருக்க முடியவில்லை. அதனால் அழவும் செய்தேன் என்றார்.

கடைசியாக விக்ராந்த் மாஸி நடிப்பில் நெட்பிளிக்ஸில் ‘தி முசாஃபிர் கபே’ தொடர் வெளியானது. இதன் அபார வெற்றியினால் இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

Summary

"WhatsApp number, car details were leaked": Vikrant Massey recalls threats after 'The Sabarmati Report'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.