ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஏஐ விளம்பரம்! ரூ. 14 லட்சத்துக்கு முகத்தை விற்கும் சீன மக்கள்!

செய்யறிவு விளம்பரம், விடியோக்களுக்காக முக அடையாளங்களை சீன மக்கள் விற்பனை செய்து வருவது குறித்து...

People in China are 'selling' their faces for AI-generated dramas

முக அடையாளத்தை விற்கும் சீன மக்கள் - படம் - செய்யறிவு

Published On :

செய்யறிவு (ஏஐ) விளம்பரம் மற்றும் அதன் மூலம் உருவாக்கப்படும் விடியோக்களுக்காக சீன மக்கள் தங்கள் முக அடையாளங்களை விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதற்கான கட்டணமாக, அதிகபட்சமாக ரூ. 14 லட்சம் வரை அவர்கள் பெறுகின்றனர்.

சீனாவில் வளர்ந்துவரும் செய்யறிவு தொழில்நுட்ப அம்சங்கள், அந்நாட்டு மக்களுக்கு மறைமுகமாக வருவாய் பெருக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

செய்யறிவைக் கொண்டு (ஏஐ) உருவாக்கப்படும் விளம்பரங்கள், ஷாட்ஸ் விடியோக்கள், விடியோ கேம்களுக்காக, முகத்தை பயன்படுத்திக்கொள்வதற்கான அனுமதியை சீன மக்கள் வழங்கி வருகின்றனர்.

இதற்காக 50 யுவான் முதல் 99,999 யுவான் வரை செய்யறிவு நிறுவனங்கள் வழங்குகின்றன. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 700 முதல் ரூ. 14 லட்சம் வரை கட்டணமாக வழங்கப்படுகிறது.

செய்யறிவு விடியோ அல்லது புகைப்படத்தின் பயன்பாடு, விடியோவின் கால அளவு, விடியோக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து இதற்கான கட்டணம் மாறுபடுகிறது.

சீனாவின் செளத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ஆக்ட் ஐடி (ActID) மற்றும் நியூ கிளா (New Claw ) ஆகிய தளத்தில் பயனர்கள் தங்கள் முகத்தை பதிவு செய்ய வேண்டும்.

இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முகங்களை செய்யறிவு தயாரிப்பு மேற்பார்வையாளர்கள் ஆராய்ந்து பாலினம், வயது, சாந்தமான முகம், கோபமான முகம், வெகுளியான முகம் என்று பல பிரிவுகளில் வகைப்படுத்தி அதில் தேவையானவற்றை தங்கள் நிறுவனங்களுக்காக தேர்வு செய்கின்றனர்.

சில பயனர்கள் தங்கள் முகத்தை தொலைக்காட்சி விளம்பரங்களிலும் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றனர். மேலும் சிலர், தங்கள் முகத்திற்கான விலையை தாங்களே நிர்ணயிக்கின்றனர் என செளத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஆக்ட் ஐடி தளத்தில் 800 பயனர்கள் முகங்களைப் பதிவு செய்துள்ளனர். நடிப்புத் துறையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, நடிப்புத் துறையைச் சாராதவர்களும் இன்னபிற தொழில்துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பதிவு செய்துள்ளனர்.

இந்த தளங்களில் இருந்து இதுவரை 300 பயனர்களின் முகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இரண்டு செய்யறிவு டிராமா நிறுவனங்கள் இந்த தளங்களில் இருந்து 10 முகங்களுக்கு உரிமம் பெற்றுள்ளன.

நாடகங்களில் ஒரு எபிஸோடுக்கு 99 முதல் 500 யுவான்கள் (ரூ. 1,400 - ரூ.7,000) கொடுக்கப்படுகின்றன. இதில் 10% கமிஷனை ஆக்ட் ஐடி தளம் எடுத்துக்கொண்டு எஞ்சிய தொகையை பயனர்களுக்கு வழங்குகிறது.

சீனாவில் ஏஐ உதவியுடன் உருவாக்கப்படும் மைக்ரோ டிராமாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இத்தகைய வாய்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

சீனாவில் 2026 தொடக்கத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1,28,000 மைக்ரோ டிராமாக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை 95% செய்யறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

People in China are 'selling' their faces for AI-generated dramas ads fees rang to ₹14 lakh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.