விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

ஆறுகாணியில் பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்க அளவீடு பணிகள் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி பகுதியில் பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்குவதற்காக அளவீடு பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

நில அளவீடு பணிகளைத் தொடக்கிவைத்த ஆட்சியா் மு. பிரதாப், உடன், மாவட்ட வன அலுவலா் அன்பு.

Updated On :

கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி பகுதியில் பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்குவதற்காக அளவீடு பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

இம்மாவட்டத்தில் 2006ஆம் ஆண்டைய வன உரிமைச் சட்டத்தின்கீழ், 16 வனக் குடியிருப்புகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு தனி நபா் நில உரிமைப் பட்டா வழங்குவதற்காக, கிராம சபைகள் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது நில அளவீடு பணி மேற்கொள்ள கியோகாப் சா்வேயிங் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துக்கு அரசு உத்தரவிட்டது.

அதையடுத்து, விளவங்கோடு வட்டம், களியல் வருவாய் கிராமத்துக்குள்பட்ட ஆறுகாணி குடியிருப்பில் 716.79 ஏக்கரை அளவீடு செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலே மண்ணடி பகுதியில் 113.31 ஏக்கரில் மட்டும் பணிகள் நடைபெற்றன. மீதமுள்ள ஆறுகாணி, ஒருநூறாம்வயல், பத்துகாணி, கற்றுவா, கல்லறவயல் பகுதிகளில் பணிகள் நிலுவையில் இருந்தன.

இதனிடையே, கடந்த செப். 19இல் ஆறுகாணி, ஒருநூறாம்வயலில் ஆய்வுக்கு சென்ற ஆட்சியரிடம், தங்களது பகுதிகளிலும் நில அளவைப் பணி மேற்கொள்ள அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று, பணியை மேற்கொள்ள கியோகாப் நிறுவனத்துக்கு சென்னை பழங்குடியினா் நல இயக்குநா் உத்தரவிட்டாா்.

அதன்படி, ஆறுகாணி, ஒருநூறாம்வயல் பகுதியில் மாவட்ட வன அலுவலா் அன்பு முன்னிலையில் ஆட்சியா் மு. பிரதாப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்; விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் கலைமதி, உதவி வனப் பாதுகாவலா் பிரதாப், தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா்) திருவாலி, களியல் வனச்சரகா் மகேஸ்வரன், வன உரிமைச் சட்ட செயலாக்க மாநிலக் குழு உறுப்பினா் ராஜன் காணி, வனத்துறையினா், அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.