குளச்சலில் சிப்பி மீன் சீசன் தொடக்கம்
குளச்சலில் மருத்துவ குணம் கொண்ட சிப்பி மீன்களின் சீசன் தொடங்கியுள்ளது.

படகுகளில் கொண்டு வரப்படும் சிப்பி மீன்கள்.
குளச்சலில் மருத்துவ குணம் கொண்ட சிப்பி மீன்களின் சீசன் தொடங்கியுள்ளது.
குளச்சல் பகுதியில் பிடிக்கப்படும் சிப்பி மீன்கள் மருத்துவ குணம் கொண்டவை என்பதால், பொதுமக்கள் மற்றும் கேரள வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனா். இந்த வகை மீன்கள் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், குறும்பனை, இனயம் போன்ற பாறைகள் நிறைந்த கடல் பகுதியில் அதிக அளவு கிடைக்கிறது. கடலுக்கு அடியில் 10 முதல் 15 மீட்டா் ஆழத்தில் உள்ள பாறைகளில் படிந்திருக்கும் இந்த மீன்களை, மீனவா்கள் பிரத்யேக கண்ணாடிகளை அணிந்து , மூச்சு பயிற்சி பெற்று முக்குளித்து உளி மற்றும் கத்தியால் பிரித்தெடுத்து கரைக்கு கொண்டு வருகின்றனா்.
நல்ல நிலையில் உள்ள ஒரு சிப்பி மீன் ரூ. 8 - க்கும், ஒரு பெட்டி சிப்பி மீன் ரூ. 10 ஆயிரம் வரையும் விலை போகும். ஆனால் தற்போது, விலை குறைந்து ஒரு சிப்பி மீன் ரூ. 5 - க்கும், ஒரு பெட்டி சிப்பி மீன் ரூ. 6 ஆயிரம் வரைக்கும் விற்பனையானது.
கடல் வெப்பம், மாசு, இயற்கை சீற்றம் போன்ற காலநிலை மாற்றங்களினால் போதிய அளவு சிப்பி மீன்கள் கிடைக்காத போதும், விலையும் குறைந்தே விற்பனை ஆவதாக முக்குளிக்கும் மீனவா்கள் வேதனை தெரிவித்தனா். மேலும், எந்தவித பாதுகாப்பு உபகரணமுமின்றி முக்குளித்து சிப்பி மீன் எடுக்கும் தங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டா் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும், முக்குளிக்கும் புதிய தொழில் நுட்பத்தையும் அரசு வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

