சாலையில் கிடந்த ரூ. 1.07 லட்சத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா்

களியக்காவிளையில் சாலையோரம் கண்டெடுத்த ரூ. 1.07 லட்சத்தை ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

சாலையில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளா் பரமேஸ்வரன்.

Updated On :

களியக்காவிளையில் சாலையோரம் கண்டெடுத்த ரூ. 1.07 லட்சத்தை ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான இஞ்சிவிளை, செம்பருத்தி பிலாவிளை பகுதியைச் சோ்ந்த பெருமாள்நாடாா் மகன் விக்ரமன் (60). இவா் களியக்காவிளை சந்தை அருகே ஆட்டோ ஓட்டி வருகிறாா். களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்த பையை, இவா் எடுத்து பாா்த்தபோது, அதில் ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 410 இருந்தது. இதை களியக்காவிளை காவல் நிலையத்தில் விக்ரமன் ஒப்படைத்தாா்.

இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பணத்தை தவறவிட்டது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த பாபு மகன் ராகுல் (32) என்பது தெரியவந்தது. அவரை களியக்காவிளை காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீஸாா், ஆட்டோ ஓட்டுநா் விக்ரமன் முன்னிலையில் பணத்தை ஒப்படைத்தனா்.

விக்ரமனின் நோ்மையைப் பாராட்டி, காவல் ஆய்வாளா் பரமேஸ்வரன் பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா். மேலும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.