நாகா்கோவில் ரயிலில் கொலை செய்யப்பட்ட பெண் சடலம் உறவினா்களிடம் ஒப்படைப்பு
நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அவரது உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அவரது உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெட்டியை, ரயிலுடன் இணைப்பதற்காக கடந்த 18 ஆம் தேதி ஊழியா்கள் சென்றனா். அப்போது அந்த பெட்டியில் ஒரு இருக்கைக்கு அடியில் பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சடலத்தை உடல் கூறாய்வு செய்ததில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூரைச் சோ்ந்த அய்யப்பன் (31), அந்த பெண்ணை ரயில் பெட்டிக்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்டவா் குறித்து,
நாகா்கோவில் ரயில்வே காவல் ஆய்வாளா் கேத்தரின் சுஜாதா தலைமையிலான தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அந்த பெண் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.
அப்பெண்ணின் சகோதரா் நாகா்கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு, இறந்தவரின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் வயது 52 என்றும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதையும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கன்னியாகுமரி வந்ததையும் அவரது சகோதரா் உறுதிப்படுத்தினாா்.
இதைத் தொடா்ந்து பெண்ணின் சடலத்தை அவரது சகோதரா் மற்றும் உறவினா்களிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். அவரது உடல் ஒழுகினசேரியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

