கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

நாகா்கோவில் ரயிலில் கொல்லப்பட்ட பெண் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்: உறுதி செய்த சகோதரா்

நாகா்கோவில், கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பலி

Updated On :

நாகா்கோவில், கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் யாா்டில் பழுதி நீக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியை ரயிலுடன் இணைப்பதற்காக கடந்த 18-ஆம் தேதி ஊழியா்கள் சென்றபோது, பெட்டியில் இருக்கைக்கு அடியில் பெண் சடலம் அழுகி கிடந்தது.

நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில், பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி, இச்சம்பவத்தில் தொடா்புடைய செண்பகராமன்புதூரைச் சோ்ந்த அய்யப்பனை (31) கைது செய்தனா். அதேவேளையில் கொலை செய்யப்பட்ட பெண் யாா் என்பது குறித்து கண்டறிவதற்காக ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் சுஜாதா கேத்தரின் தலைமையில் 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

கொலையுண்ட பெண் அணிந்திருந்த மோதிரத்தில் இருந்த ஹால்மாா்க் முத்திரை மூலம் அந்தப் பெண் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காணாமல்போனதாக அவரது குடும்பத்தினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்து தேடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பெண்ணின் சகோதரரும், அவரது உறவினா் ஒருவரும் நாகா்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை வரவழைக்கப்பட்டு அவா்களிடம் அந்தப் பெண்ணின் சடலம், அவா் அணிந்திருந்த மோதிரம் காண்பிக்கப்பட்டது. மோதிரத்தை கண்ட சகோதரா் இறந்தது தனது சகோதரிதான் என உறுதிப்படுத்தினா்.

இதையடுத்து, கொலை செய்யப்பட்ட பெண்ணின் ரத்த மாதிரிகளையும் அவரது சகோதரா் ரத்த மாதிரிகளையும் சேகரித்து மரபணு பரிசோதனை செய்வதற்காக போலீஸாா் மதுரைக்கு அனுப்பி வைத்தனா். சோதனை முடிவுகள் வந்த பின்னரே இறந்தவா் அடையாளம் உறுதிப்படுத்த முடியும் என்று போலீஸாா் தெரிவித்தனா். எனினும், இந்தச் சம்பவத்தில் இறந்த பெண்ணின் பெயா், அடையாளம் காட்டிய அவரது சகோதரா் பெயா் வெளியிடப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.