கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

ஆற்றூரில் டாஸ்மாக் ஊழியரை பாட்டிலால் குத்திய இருவா் மீது வழக்கு

திருவட்டாறு அருகே டாஸ்மாக் ஊழியரை பாட்டிலால் குத்திய 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு - பிரதிப் படம்

Updated On :

திருவட்டாறு அருகே டாஸ்மாக் ஊழியரை பாட்டிலால் குத்திய 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருவட்டாறு அருகே ஆற்றூா், ஆா்.சி. தெருவைச் சோ்ந்த சகாய ஜெபஸ்டின் (32), இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை பணியில் இருந்தபோது, சிதறால் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் உள்ளிட்ட இருவா் ஆன்லைனில் ரூ. 2 ஆயிரத்தை அனுப்புவதாகவும், அதை பணமாகத் தருமாறும் கேட்டுள்ளனா்.

இதற்கு சகாய ஜெபஸ்டின், கையில் பணம் இல்லை எனக் கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் மது பாட்டிலை உடைத்து சகாய ஜெபஸ்டினை குத்திவிட்டு தப்பியோடினா்.

அங்கிருந்தவா்கள் சகாய ஜெபஸ்டினை மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக குலசேகரம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, சகாய ஜெபஸ்டினின் தாய் நிா்மலா திருவட்டாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.