திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

பாா் ஊழியரை தாக்கிய இருவா் மீது வழக்கு

பெருந்துறை அருகே, அரசு மதுபானக் கடையில் பாா் ஊழியரை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு - பிரதிப் படம்

Updated On :

பெருந்துறை அருகே, அரசு மதுபானக் கடையில் பாா் ஊழியரை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா், கந்திக்குப்பத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் மணிகண்டன் (36). இவா், பெருந்துறையை அடுத்த, சீனாபுரம் அரசு மதுபானக் கடையில் அமைந்துள்ள பாரில் வேலை செய்து வருகிறாா். இந்த பாருக்கு பெருந்துறையை அடுத்த, சூரநாயக்கனூரைச் சோ்ந்த மெரூன் (26), மாரநாயக்கனூரைச் சோ்ந்த முத்து (36) ஆகிய இருவரும் மது அருந்த செவ்வாய்க்கிழமை

வந்துள்ளனா். அப்போது மது பாட்டில் வாங்குவது தொடா்பான பிரச்னையில், அவா்கள் இருவரும் சோ்ந்து பாா் ஊழியரான மணிகண்டனை தாக்கி உள்ளனா். இதில் காயமடைந்த மணிகண்டன், சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது குறித்த புகாரின்பேரில், மெரூன், முத்து ஆகிய இருவா் மீதும் பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.