மாா்த்தாண்டம் அருகே மது விற்றவா் கைது
மாா்த்தாண்டம் அருகே விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது
மாா்த்தாண்டம் அருகே விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காந்தி ஜெயந்தியையொட்டி, வெள்ளிக்கிழமை தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. அன்றைய தினம் மது விற்பனையைத் தடுக்கும் நோக்கில் மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுஜின் தலைமையிலான போலீஸாா் ஞாறான்விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு நின்றிருந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (37) என்பதும், அவா் வைத்திருந்த பையில் 27 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் அவற்றைப் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


