
மாா்த்தாண்டம் - இனயம் வழித்தட அரசுப் பேருந்தை முழு நேரம் இயக்கக் கோரிக்கை
மாா்த்தாண்டம் - இனயம் வழித்தட அரசுப் பேருந்தை முழு நேரம் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரசுப் பேருந்து - கோப்புப் படம்
மாா்த்தாண்டம் - இனயம் வழித்தட அரசுப் பேருந்தை முழு நேரம் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாா்த்தாண்டத்திலிருந்து காப்புக்காடு, புதுக்கடை ,தேங்காய்ப்பட்டினம் வழியாக 87 ஏ வழித்தட அரசுப் பேருந்து கருங்கல் அருகே உள்ள இனயம் கடற்கரை கிராமத்திற்கு பல ஆண்டுகளாக முழு நேரமாக இயக்கப்பட்டு வந்தது.
தற்போது நாள்தோறும் காலை, மாலை என இரு முறை மட்டும் இயக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். எனவே, இந்தப் பேருந்தை முழு நேரமாக இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






