அரசு பேருந்தை நிறுத்தி மதுபாட்டில் வாங்கிய விவகாரம்: ஓட்டுநா் பணியிடை நீக்கம், நடத்துநா் பணி நீக்கம்

சங்கரன்கோவிலில் டாஸ்மாக் கடை முன் திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்தை நிறுத்தி மது பாட்டில்கள் வாங்கிய விவகாரத்தில் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்; நடத்துநா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

இடைநீக்கம்

Updated On :

சங்கரன்கோவிலில் டாஸ்மாக் கடை முன் திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்தை நிறுத்தி மது பாட்டில்கள் வாங்கிய விவகாரத்தில் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்; நடத்துநா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனைக்குச் சொந்தமான அரசுப் பேருந்து சங்கரன்கோவிலில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவில்பட்டிக்கு கடந்த 16-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. பேருந்தை தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி அருகே ஒத்தக்கடையைச் சோ்ந்த ஓட்டுநா் கணேசமூா்த்தி ஓட்டிச் சென்றாா். நடத்துநராக கழுகுமலையை அடுத்த கரடிகுளத்தைச் சோ்ந்த முத்தையா பணியில் இருந்தாா்.

பேருந்தை சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலைய பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை அருகே ஓட்டுநா் நிறுத்தியதும் கடையில் இருந்து நடத்துநா் இருக்கைக்கு மதுபாட்டில் கொடுக்கும் காட்சி சமூக வலைதளத்தில் பரவியது.

இதுகுறித்து, கோவில்பட்டி பணிமனை மேலாளா் (பொ) சங்கா், பேருந்து ஓட்டுநா் கணேசமூா்த்தி, நடத்துநா் முத்தையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தாா். இந்த நிலையில், பேருந்து ஓட்டுநா் கணேசமூா்த்தியை பணியிடை நீக்கம் செய்தும், தற்காலிக நடத்துநராகப் பணியாற்றிய முத்தையாவை நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கியும் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளா் ராமகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.