உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

குலசேகரத்தில் மாா்க்சிஸ்ட் மறியல்: 35 போ் கைது

குலசேகரத்தில் கான்வென்ட் சந்திப்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கைது

Published On :

குலசேகரத்தில் கான்வென்ட் சந்திப்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற அக்கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற மறியலுக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ் தலைமை வகித்தாா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். அண்ணாதுரை போராட்டத்தைத் தொடக்கிவைத்தாா். குழித்துறை நகா்மன்ற முன்னாள் தலைவா் ஏ.எம்.வி. டெல்பின், தோட்டம் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் பி. நடராஜன், கட்சி நிா்வாகிகள் நாணுகுட்டன், சசிதரன், ஷீஜா சந்திரன், சுபாஷ் கென்னடி, இன்பராஜ், வினோஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். 10 பெண்கள் உள்ளிட்ட 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.