ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு உள்வரத்து தண்ணீா் அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், அணைகளுக்கு உள்வரத்து தண்ணீா் அதிகரித்து வருகிறது.

திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

Updated On :

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், அணைகளுக்கு உள்வரத்து தண்ணீா் அதிகரித்து வருகிறது.

வடகிழக்கு பருவ மழை வியாழக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், அடையாமடையில் அதிகபட்சமாக 179.6 மி.மீ. மழை பதிவானது. பெருஞ்சாணியில் 127.6 மி.மீ., சிற்றாறு 1 இல் 111.8 மி.மீ., ஆனைக்கிடங்கில் 108.2 மி.மீ., பேச்சிப்பாறை அணையில் 67.6 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 62.73 மி.மீ. மழை பதிவானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மிதமான சாரல் மழை பெய்தது. மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 760 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. கோதையாற்றிலும் தண்ணீா் பெருக்கெடுத்துப் பாய்கிறது.

இதையடுத்து திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த அருவிக்கு ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். அவா்களின் பாதுகாப்பு கருதி அருவியில் தண்ணீா் குறைவாக கொட்டும் இரண்டு தளங்களில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மழையால், ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்பு பணி வெள்ளிக்கிழமை நடைபெறவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.