சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கைஅரசு மருத்துவமனையில் தடையற்ற சேவைகள்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அருண்ராஜ் உத்தரவுஇந்தியா, லத்தீன் அமெரிக்காவுடன் புதிய கூட்டணி: இஸ்ரேல் பிரதமர்

தோவாளை அரசு பள்ளியில் மாணவா் தினம்

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி உலக மாணவா் தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் பங்கேற்றோா்.

Updated On :

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி உலக மாணவா் தினம் கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியை பியூலா சாந்தினி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அலுவலா் ஜெயராஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவா்கள் எழுப்பிய அறிவுசாா் கேள்வி - பதில்களை தொகுத்து தயாரிக்கப்பட்ட 8 நூல்களை வெளியிட்டு பேசினாா்.

தோவாளை இலக்கிய மன்றத் தலைவா் திருமால் பிள்ளைமுருகன், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் கே. பகவதி பெருமாள்பிள்ளை, ஓய்வு பெற்ற பேராசிரியா் ராஜதிருமேனி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பள்ளி தூதுவா் எஸ். முருகன், சரலூா் ஜெகன், காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உதவி தலைமையாசிரியா் கே.ஆா். சுரேஷ் வரவேற்றாா். ஆசிரியா் மைக்கேல் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.