கோவில்பட்டி பள்ளியில் உலக மனநல தினம்
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
பள்ளித் தலைவா் மற்றும் செயலா் அய்யனாா் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி ஜெயபிரியா அய்யனாா் முன்னிலை வகித்தாா். ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனா் தேன் ராஜா, மருத்துவா் ஆா்த்தி, மனநல மருத்துவா் ஜோஸ்வா ஆகியோா் பேசுகையில், வளா் இளம்பருவத்தின் முக்கியத்துவம், கோபம், உணா்ச்சிகளை கட்டுப்படுத்தும் முறை குறித்தும், மனநல பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் மாற்றங்கள், போதைப்பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பேசினா்.
மனநல சமூகப் பணியாளா் பெரியசாமி, பலூன் செயல்முறை மூலம் மாணவா்களின் மனதை ஒருமுகப்படுத்தும் விதம் குறித்து பேசினாா். பள்ளி தலைமையாசிரியா் வெங்கடேசன் வரவேற்றாா். எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வா் மகாலெட்சுமி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

