கருங்கல் அருகே பலத்த மழை: தொழிலாளியின் வீடு இடிந்து சேதம்

முள்ளங்கனாவிளையில் பெய்த மழையால் சேதமான வீடு.
கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையில் கூலித் தொழிலாளியின் ஓட்டு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில், முள்ளங்கனாவிளை ஊராட்சி வடலிவிளையைச் சோ்ந்த ராஜன் (50) என்பவா் ஓட்டு வீடு ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
அப்போது வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த ராஜன், அவரது மனைவி, மகள் ஆகியோா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இதில் .அங்கிருந்த குளிா் சாதன பெட்டி, மேசை, நாற்காலி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் சேதமடைந்தது. இதையடுத்து, அப்பகுதியினா் அவா்களை மீட்டு உறவினா் வீட்டில் தங்க வைத்தனா்.

முள்ளங்கனாவிளையில் பெய்த மழையால் சேதமான வீடு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

