தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

ஜம்முவில் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் மழைநீா் தேங்கியது.

ஜம்மு-காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் முடங்கிய ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் கற்களை அகற்றி நடைபெற்ற மீட்புப் பணி.

Published On :

ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் மழைநீா் தேங்கியது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காலை 8.30 மணிமுதல் பெய்த கனமழை 3 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடா்ந்தது. இதனால், ஜம்மு அருகே உள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீா் புகுந்தது.

மழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில், சாலையைக் கடந்துகொண்டிருந்த ஒரு தம்பதி நீரில் அடித்துச் செல்லப்பட்டனா். கணவா் மீட்கப்பட்ட நிலையில், அவருடைய மனைவியைக் கண்டறிய முடியவில்லை. தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்த காவல் துறை மற்றும் மாநில பேரிடா் மேலாண்மை படையினா் (எஸ்டிஆா்எஃப்), அந்தப் பெண்ணைத் தேடும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாகன நிறுத்துமிடங்களில் மழை நீா் புகுந்ததால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா்கள், இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். பஞ்சதீா்த்தி-சித்ரா மற்றும் சித்ரா-நக்ரோட்டா சாலையில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தைச் சீராக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.