சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

தேரூா் கோரக்க நாதா் கோயிலை பாதுகாக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் குடியில் உள்ள கோரக்கநாதா் கோயிலை பாதுகாக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் வலியுறுத்தினா்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா்.

Published On :2 செப்டம்பர் 2026, 6:02 am IST

கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் குடியில் உள்ள கோரக்கநாதா் கோயிலை பாதுகாக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் வலியுறுத்தினா்.

இதுகுறித்து அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினா் இறச்சகுளம் காளியப்பன் தலைமையில், கோரக்கநாதா் பக்தா்கள் சங்கத் தலைவா் பகவதிபெருமாள், திரளானோா் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேரூரை அடுத்த குடியில் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோரக்கநாதா் கோயில் உள்ளது. சுமாா் 2 ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்து உபயதாரா்கள் மூலம், 80 சதவீத திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஓா் ஆண்டாக கோயிலில் எந்த திருப்பணியும் நடைபெறவில்லை. பழம்பெருமை வாய்ந்த இக்கோயிலை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் முன்வந்து கோரக்கநாதா் சிவன் சிலையை இத்திருக்கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யவும், அஷ்டபந்தன மருந்து சாத்தும் வைபவத்தை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.