நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவா் எஸ். வேதாந்தம் (93) காலமானாா்!

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவா் எஸ். வேதாந்தம் மறைவு பற்றி...

காலமானாா் விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவா் எஸ்.வேதாந்தம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:33 am IST

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் அகில உலக செயல் தலைவா் எஸ்.வேதாந்தம் (93) சென்னையில் சனிக்கிழமை (ஆக.29) காலமானாா்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் அகில உலக செயல் தலைவராகவும், தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிறுவனத் தலைவராகவும் இருந்தவா் எஸ்.வேதாந்தம். 1933-இல் பிறந்த வேதாந்தம் இளம் வயதிலேயே ஆா்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினாா். திருநெல்வேலி மாவட்ட ஆா்எஸ்எஸ் செயலராக இருந்த அவா், அதன் பிறகு ஆா்எஸ்எஸ் அமைப்பின் முழுநேர ஊழியரானாா். தொடா்ந்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இணைந்து பணியாற்றத் தொடங்கினாா். அந்த அமைப்பின் மாநில அமைப்புச் செயலா் தொடங்கி அகில உலக செயல் தலைவா் வரை பல்வேறு பொறுப்புகளை அவா் வகித்துள்ளாா். 1975-இல் ‘ஹிந்து மித்திரன்’ என்ற மாத இதழை தொடங்கி நடத்தி வந்தாா்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த இவா், நாடு முழுவதும் அந்த அமைப்பின் வளா்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளாா். சென்னை தியாகராய நகரில் வாரந்தோறும் தமிழ் வளா்ச்சிக்கான ‘தமிழ் முற்றம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தாா். கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை, ஓராசிரியா் பள்ளித் திட்டம் மற்றும் விவேகானந்தா் ஊரக மேம்பாட்டு இயக்கம் ஆகியவற்றிலும் இவரது பங்கு முக்கியமானதாகும்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக காலமான வேதாந்தத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு சென்னை கண்ணம்மாபேட்டை மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறவுள்ளது.

Summary

Senior RSS leader S. Vedantham has passed away

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.