பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதிதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

நிதி முறைகேடு புகார்கள் பொய்யெனில் எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை: விஸ்வ ஹிந்து பரிஷத்

அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு தொடர்பாக...

அயோத்தி ராமர் கோயில்

Published On :6 ஜூலை 2026, 1:57 pm IST

ராமர் கோயில் நிதி முறைகேடு தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கும் எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு தொடர்பாக பிரியங்கா காந்தி, அரவிந்த் கேஜரிவால் உள்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடத்துமாறு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அயோத்தி காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அயோத்தியில் உள்ள துணை காவல்துறை கண்காணிப்பாளருக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ராமர் கோயில் நிதி முறைகேடு தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக் கோரியுள்ளார். வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்கத்துடன் குற்றச்சாட்டு வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘ரூ. 20,000 கோடி நிதி முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் புள்ளிவிவரங்களுடன் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமராக்களை அணைத்து, பல்லாயிரம் கோடி மதிப்புள்ள காணிக்கைகளை கீழ்நிலை ஊழியர்கள் மட்டும் முறைகேடு செய்திருக்க முடியுமா அல்லது செல்வாக்கான நபர்களும் இதில் தொடர்பில் உள்ளனரா என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவிலில் விலையுயர்ந்த பொருள்கள் மட்டுமின்றி ரொக்கமாக ரூ. 200 கோடி திருடப்பட்டதாக கேஜரிவால் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரும் இதேபோன்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

குற்றச்சாட்டுகளைத் தெரிவித்த அனைவரும் அதற்குரிய ஆதாரங்களை வழங்கினால் விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும். எந்த ஆதாரங்களுமின்றி பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தது கண்டறியப்பட்டால், அதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்’ என கடிதத்தில் விஎச்பி தலைவர் அலோக் குமார் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Action against opposition parties if allegations of financial irregularities are false: Vishwa Hindu Parishad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.