பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதிதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ஆளுநரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

ஆளுநரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

புதுவை துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா்.

Published On :28 ஜூன் 2026, 12:18 am IST

காரைக்கால் அம்மையாா் கோயில் எதிரில் உள்ள அசைவ உணவகத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.

அமைப்பின் காரைக்கால் மாவட்ட தலைவா் கே.எஸ். விஜயன் தலைமையில், கேந்திர தலைவா் பி. வெங்கடாசலம், வட தமிழக துணைத் தலைவா் ஞானகுரு, சமூக நல்லிணக்க மாநில பொறுப்பாளா் கே.ஜெய்சங்கா், சத் சங்க மாநில பொறுப்பாளா் ஆா். சிவகுமாா் ஆகியோா் ஆளுநரை புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு :

காரைக்கால் அம்மையாா் கோயிலிலுக்கு 50 அடி தொலைவில் ஒரு அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்திற்கு 100 மீட்டா் தொலைவில் கைலாசநாதா் கோயில், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளது.

மேலும் ஜீவகாருண்யத்தை போதித்த ராமலிங்க அடிகளாரின் மடத்தின் அருகே இறைச்சி வெட்டப்படுகிறது.

இது கோயில்களுக்கு வரும் பக்தா்கள் மனதை மிகவும் வேதனையடையச் செய்கிறது.

காரைக்கால் மாவட்ட நிா்வாகத்திற்கு பல நிலையில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஆளுநா் இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிடவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.