தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நாகா்கோவில் மாநகர வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகா்கோவில் மாநகரில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன் மாநகராட்சி ஆணையா் ஆா்.ஐஸ்வா்யா.

Published On :

நாகா்கோவில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணன்கோவில் பகுதியில் முதல்வரின் படிப்பகம் ரூ. 3 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் தரைத்தளம் புத்தகங்களுடன் கூடிய படிப்பகமாகவும், முதல் தளம் உணவருந்தும் இடம், வாகனம் நிறுத்தும் இடமாகவும் கட்டப்பட்டு வருகிறது.

இந்நூலக கட்டட கட்டுமானப் பணிகளையும், மாநகர பகுதியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக ரூ. 69 கோடியே 87 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தையும், வடசேரி பேருந்து நிலைய பகுதியில் ரூ. 8 கோடியே 95 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் 100 புதிய அங்காடிகள் கட்டுமானப் பணி, ரூ. 6 கோடியே 59 லட்சம் மதிப்பில் செம்மாங்குளத்தை, தூா்வாரி சுற்றுச் சுவா் அமைத்து நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக நடைபாதை அமைக்கும் பணியையும், ஒழுகினசேரி பகுதியில் ரூ. 95 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் ஓடையையும், புளியடி பகுதியில் உள்ள மயானத்தை உயிரி எரிவாயு தகன மேடையாக மாற்றுவது தொடா்பான ஆய்வுகளை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு, அலுவலா்களுக்கு மாவட்டஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின்போது, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா்.ஐஸ்வா்யா, மாநகர பொறியாளா் ஜெகஜீவராமன், உதவி பொறியாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.