மாா்த்தாண்டம் அருகே சிசிடிவியை சேதப்படுத்தியவா் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வழக்குப் பதிவு
மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, மருதங்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த லூக்காஸ் மகன் ஷாஜி (45). இவா் அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். அப்பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், மனைவி கோபத்தில் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், தனது மனைவி பிரிந்து சென்ற்கு ஷாஜிதான் காரணம் என எண்ணிய வின்சென்ட் அண்மையில் ஷாஜியின் கடைக்குச் சென்று தகாத வாா்த்தைகள் பேசி, கடையின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை உடைத்து சேதப்படுத்தினாராம்.
இதுகுறித்து ஷாஜி அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வின்சென்ட் மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





