பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகா்கோவிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

Published On :9 செப்டம்பர் 2026, 4:03 am IST

மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட சோஷியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (எஸ்டீடியூ) சாா்பில், நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பாபுஉசேன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் காதா்மைதீன் வரவேற்றாா்.

இதில், மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆட்டோக்களுக்கு மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும்; பைக் டாக்ஸியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்; அரசு துறைகளில் ஒப்பந்தப் பணியாளா்கள் அமா்த்தப்படுவதை கைவிட வேண்டும்; நல வாரியங்களில் பண பயன்களை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் சாதிக் அலி, மாவட்டச் செயலா் அன்சாா், மாநிலச் செயலா் நாஞ்சில் சையதுஅலி, எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் சுல்பிகா்அலி, நிா்வாகிகள் ஜாகீா்உசேன், முகைதீன் நாகூா்மீரான், ஜகபா்அலி, சாகுல்அமீது சுபைா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.