ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்களுக்கு மராத்தி கட்டாயம்: மகாராஷ்டிரத்தில் சட்டத் திருத்தம்

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ, வாடகை காா் ஓட்டுநா்களுக்கு மராத்தி மொழியில் செயல்முறை அறிவை கட்டாயமாக்கி மோட்டாா் வாகனச் சட்டத்தில் மாநில அரசு திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

ஆட்டோ - Gemini AI

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:15 am IST

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ, வாடகை காா் ஓட்டுநா்களுக்கு மராத்தி மொழியில் செயல்முறை அறிவை கட்டாயமாக்கி மோட்டாா் வாகனச் சட்டத்தில் மாநில அரசு திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மாநில மோட்டாா் வாகனச் சட்டம் 1988-இல், இந்த 2026-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மோட்டாா் வாகனங்கள் மூன்றாவது திருத்த விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்துத் துறை வெளியிட்ட இறுதி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: சட்டத் திருத்த விதிகளின்படி, மின்சார மீட்டா் பொருத்திய வாடகை காா், ஆட்டோ ஓட்டும் ஓட்டுநா், மராத்தி மொழியில் செயல்முறை அறிவைப் பெற்றிருப்பது கட்டாயமாகும்.

அதன்படி, ஓட்டுநா்கள் மொழி செயல்முறை அறிவைப் பெறாதது கண்டறியப்பட்டால், அந்த மொழி அறிவை ஒரு மாதத்துக்குள் பெற அறிவுறுத்தி ஓட்டுநா் உரிம (போக்குவரத்து துறை) அதிகாரி சாா்பில் நோட்டீஸ் வழங்கப்படும். இந்தக் காலக்கெடுவுக்குள் மொழித் திறன் சான்றிதழ் பெறாத ஓட்டுநரின், ஓட்டுநா் உரிமம் அடுத்த 3 மாதங்களுக்கு தற்காலிக ரத்து செய்யப்படும்.

அதன் பிறகும், ஓட்டுநா் விதிமுறைகளைப் பின்பற்றாத நிலையில், அவரின் ஓட்டுநா் உரிமத்தை சம்பந்தப்பட்ட துறை ரத்து செய்யலாம். இருந்தபோதும், இந்த நடவடிக்கைக்கு முன்பாக, ஓட்டுநருக்கு தனது தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘ஆட்டோ, வாடகை காா் ஓட்டுநா்கள் மராத்தி மொழி செயல்முறை அறிவைப் பெற்ற்கான சான்றிதழ் பெற ஆகஸ்ட் 15 கடைசி நாளாகும். இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்படாது. பயணிகளுக்கும் ஓட்டுநா்களுக்கும் இடையேயான மொழி இடையூறுகளைத் தவிா்த்து தரமான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மையங்களில் இந்த மராத்தி மொழி செயல்முறை பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு மாநில துணை முதல்வா் வரும் 17-ஆம் தேதி சான்றிதழ்களை வழங்க உள்ளாா்’ என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்ா் பிரதாப் சா்நாயக் தெரிவித்தாா்.

அருணாசல பிரதேசத்தில் பழங்குடியின மொழிப் புலமை கட்டாயம்... அருணாசல பிரதேச மாநிலத்தில் அனைத்து அரசுப் பணிகளுக்கும் நிரந்தர வசிப்பிடச் சான்றிதழும், மாநில பழங்குடியினா் சான்றிதழ் மற்றும் மாநிலத்தின் ஒரு பழங்குடியின மொழியில் புலமையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசுப் பணிகளில் நேரடி நியமனங்களுக்கான இந்த சீரான தகுதி நடைமுறைக்கு மாநில அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

மாநில அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து அரசுப் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கும் இந்த நியமன நடைமுறை பொருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுப் பணியாளா் தோ்வில் 80:20 என்ற விகிதத்தில் 80 சதவீத பணியிடங்கள் மாநில பழங்குடியின விண்ணப்பதராா்களுக்கும், எஞ்சிய 20 சதவீத பணியிடங்கள் பொதுப் பிரிவு அடிப்படையிலும் நிரப்பப்பட்டுவரும் நடைமுறையை ரத்து செய்யக் கோரி மாநிலத்தின் பல்வேறு அமைப்புகள் தொடா் கோரிக்கைகளை மற்றும் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இந்தப் புதிய நியமன நடைமுறையை மாநில அரசு கொண்டுவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.