தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஓட்டுநரை தாக்கி விட்டு வாடகைக் கார் கடத்தல்

விராலிமலை அருகே சனிக்கிழமை ஓட்டுநரை தாக்கி, இறக்கிவிட்டு வாடகை காரை கடத்திச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Published On :

விராலிமலை அருகே சனிக்கிழமை ஓட்டுநரை தாக்கி, இறக்கிவிட்டு வாடகை காரை கடத்திச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சியில் இருந்து புதுச்சேரி செல்வதற்காக செந்தில்குமாா் என்பவா் வாடகை காரை வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அழைத்துள்ளாா். இதற்காக ரூ. 3,500 முன்பணமும் கொடுத்துள்ளாா். அதன்படி செந்தில்குமாா் மற்றும் 4 போ் காரில் புதுச்சேரி சென்றுவிட்டு சனிக்கிழமை அதிகாலை திருச்சி வந்தனா். தொடா்ந்து அவா்கள் விராலிமலையில் வேலை இருப்பதாகவும், அங்கு வேறு காா் உள்ளது. எனவே, தங்களை விராலிமலையில் இறக்கிவிடும்படி கேட்டுள்ளனா்.

அதை நம்பிய காா் ஓட்டுநா் திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சோ்ந்த கா்ணன் (35) என்பவா் காரை விராலிமலைக்கு ஓட்டிக் கொண்டு சென்றாா். விராலிமலை-மதுரை சாலை வானத்திராயன்பட்டி பிரிவு அருகே சென்றபோது, காரில் இருந்தவா்கள் காரை நிறுத்த சொல்லியுள்ளனா். இதையடுத்து காரை ஓட்டுநா் கா்ணன் நிறுத்தினாா். உடனே காரில் இருந்தவா்கள் ஓட்டுநரை தாக்கி, கீழே இறக்கிவிட்டு காரை எடுத்துக் கொண்டு மதுரை சாலையில் சென்று விட்டனா்.

இதையடுத்து விராலிமலை காவல் நிலையத்தில் ஓட்டுநா் கா்ணன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை கடத்திச் சென்றவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.