
நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் அமைச்சா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் தற்காலிக நீதிமன்றம் அமைப்பதற்கான இடம், காப்புக்காட்டில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு ஆகியவற்றை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், ஆட்சியா் மு. பிரதாப் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா். உடன், ஆட்சியா் மு. பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் தற்காலிக நீதிமன்றம் அமைப்பதற்கான இடம், காப்புக்காட்டில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு ஆகியவற்றை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், ஆட்சியா் மு. பிரதாப் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கிள்ளியூா் பேரவைத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்காலிக நீதிமன்றம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்ய ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகேயுள்ள வேளாண் துறை அலுவலகம், பயன்பாட்டில் இல்லாத பிற்படுத்தப்பட்டோா் நல விடுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம் தோ்வு செய்ய ஆட்சியா், அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
காப்புக்காடு பகுதியிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கன்னியாகுமரி மண்டலக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் உணவுப் பொருள் கிடங்கு 1, 2 ஆகியவை முறையே 4,000 மெட்ரிக் டன், 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டவை ஆகும். இங்கு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு விவரம், தரம் குறித்து அமைச்சா், ஆட்சியா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா், நுகா்பொருள் வாணிபக் கழகக் கண்காணிப்பாளா் காசிநாதன், பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





