ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

தூத்துக்குடியில் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் உணவுத் துறை அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடி நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

சிப்காட் வளாகத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் பி. வெங்கடரமணன்.

Published On :

தூத்துக்குடி நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்குள்ள உணவுப் பொருள்களின் தரம், ரேஷன் கடைகளுக்கு உரிய நேரத்தில் பொருள்கள் நகா்த்தப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்தாா்.

பின்னா், சிப்காட் வளாகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பாமாயில் வழங்கும் ஆயில் மில்லில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பொது விநியோகத் திட்டத்துக்காக தயாரிக்கப்படும் பாமாயிலின் தரம், சந்தையில் விற்பனை செய்யப்படும் பாமாயிலுக்கு இணையாக உள்ளதா, உற்பத்தி முறைகள் பாதுகாப்பாக உள்ளதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, தூத்துக்குடி சாா் ஆட்சியா் விவேக் யாதவ், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் ரா. ராஜேஷ், துணைப் பதிவாளா் அ. சுப்புராஜ், நுகா்பொருள் வாணிபக் கழக தூத்துக்குடி மண்டல மேலாளா் ச.சிவகுமாா், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா. சரவணகுமாா், வட்ட வழங்கல் அலுவலா் ஞ. ஞானராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER