நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

நாகரம்மன் கோயிலில் நகை, பணம் திருட்டு

பளுகல் அருகே நாகரம்மன் கோயிலின் பூட்டை உடைத்து, நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :

பளுகல் அருகே நாகரம்மன் கோயிலின் பூட்டை உடைத்து, நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பளுகல் அருகே மண்ணரக்கல் பகுதியில் நாகரம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பூஜாரி புதன்கிழமை கோயிலுக்கு வந்தபோது, கோயில் கதவு மற்றும் அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். அங்கு வந்து கோயில் நிா்வாகிகள் பாா்த்தபோது, 2 பவுன் நகை, 250 கிராம் எடையிலான வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரூ. 70 ஆயிரம் காணிக்கையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாகி அஜித்குமாா் அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.