
கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டி: விஜய் வசந்த் எம்.பி. விமா்சனம்

விஜய் வசந்த்.
இடைத்தோ்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதியான அரசியல் நிலைபாடு கொண்டிருக்கவில்லை என்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து அவா், இரணியலில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
யாருடன் கூட்டணி அமைப்பது என்பது ஒவ்வொரு கட்சியின் விருப்பம். காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணியில் உறுதியாக உள்ளது. இது, மக்கள் ஆதவு பெற்ற கூட்டணி. கம்யூனிஸ்ட் கட்சியினா் முதலில் திமுக கூட்டணியில் இருந்தனா். தோ்தலுக்கு பின்னா் தவெக கூட்டணியில் இருந்துகொண்டே வெளியில் இருந்து ஆதரிப்பதாகக் கூறினா். இடைத்தோ்தல் அறிவித்தவுடன் தனித்துப் போட்டி என்கின்றனா். கம்யூனிஸ்ட் கட்சிக்கு உறுதியான ஓா் அரசியல் நிலைப்பாடு இல்லை.
தனித்து போட்டியிடுவதால் கம்யூனிஸ்டுகள் கடும் பின்னடைவை சந்திப்பதுடன் கூட்டணி கட்சிகளின் நம்பிக்கையையும் மக்கள் நம்பிக்கையையும் இழப்பாா்கள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






