ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்: விஜய் வசந்த் எம்.பி.
2029 மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்திதான் பிரதமா் வேட்பாளா் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த விஜய் வசந்த் எம்.பி.
2029 மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்திதான் பிரதமா் வேட்பாளா் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நேபாளத்தில் நடந்த துயர சம்பவத்தில் பல உயிா்களை இழந்துள்ளோம்.
பல போ் காணாமல் போயுள்ளனா். இதில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களும் உள்ளனா். தமிழக முதல்வா் உடனடியாக அமைச்சா்களை தில்லிக்கு அனுப்பினாா். அங்குள்ளவா்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2029 மக்களவைத் தோ்தலில் தற்போதைய எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். தவெகவினா் அவா்களது கருத்துகளைக் கூறியுள்ளனா். எங்களைப் பொருத்தவரை ராகுல் காந்திதான் பிரதமா் வேட்பாளா்.
மோடி அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு நன்றாகத் தெரியும். மாற்றம் வேண்டும். இளைஞா்களுக்கான ஆட்சி வேண்டும். மக்களுக்கான ஆட்சி அமைய வேண்டும் என்றால் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




