நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

2029-ல் நிச்சயமாக ராகுல் காந்திதான் பிரதமராக வருவார்: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

ஈரோட்டில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அளித்த பேட்டி.....

Congress MP Jothimani

ஜோதிமணி - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 8:17 pm IST

2029இல் நிச்சயமாக ராகுல் காந்திதான் பிரதமராக வருவார் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோட்டில் அவர் அளித்த பேட்டியில், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கும் போட்டி போடலாம். அந்த உரிமையை ஜனநாயகம் அனைவருக்கும் தருகிறது. தமிழ்நாட்டில்கூட இது முதல்முறை கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது லேடியா, மோடியா என்று தேர்தலைச் சந்தித்தார்கள்.

ஆனால் அந்த மாதிரி நடக்கவில்லை. இதுவெல்லாம் தேர்தலுக்கான யுக்தி என்று நினைக்கிறேன். மோடி ஆட்சியை அச்சமின்றி எதிர்க்கக்கூடிய வீழ்த்தக்கூடிய வல்லமை ராகுல் காந்திக்குத்தான் உள்ளது. 2029இல் நிச்சயமாக ராகுல் காந்திதான் பிரதமராக வருவார். தமிழ்நாட்டின் தேர்தலைக்கூட கருத்துகணிப்பு சரியாக கணிக்கவில்லை.

இது கருத்து கணிப்பு கிடையாது, கருத்து திணிப்பு. மோடியின் வீழ்ச்சி வெளிப்படையாக தெரிகிறது. மோடியின் வீழ்ச்சி வெளிப்படையாக மக்களுக்கு தெரிகிற சூழ்நிலையில் அதை மறைக்கவே இந்த கருத்து கணிப்புகள் நடக்கின்றன. இந்தியாவில் வெறுக்கப்படுகிற அரசியல் தலைவர் மோடிதான்.

மாணவர்களும் இளைஞர்களும் இதை கூறுவார்கள் என்றார்.

Summary

Congress MP Jothimani has stated that Rahul Gandhi will definitely become the Prime Minister in 2029.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.